மஹிந்தவின் முட்டாள்தனம்! ஆபத்தான கட்டத்தில் சிறிலங்கா
சீனாவின் அனுசரனையுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தினால் ஏற்படப் போகும் அபாயம் குறித்து எச்சரிக்கைப்பட்டுள்...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_803.html

சீனாவின் அனுசரனையுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தினால் ஏற்படப் போகும் அபாயம் குறித்து எச்சரிக்கைப்பட்டுள்ளது.
குறித்த திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டாலும், அதனை தொடரக்கூடாதென சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை எச்சரித்துள்ளது.
குறித்த திட்டம் நடைமுறைக்கிடப்படும் பட்சத்தில், சிறிலங்காவின் வான்பரப்பு தொடர்பில் நெருக்கடியான நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் பிராந்திய நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டம் சீனாவின் வசமிருக்குமானால், அதற்கு மேலாக உள்ள வான் பிராந்தியமும், சீனாவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்றும், விமானப் போக்குவரத்து அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பாக, 1944ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட சிக்காகோ பிரகடனத்தில் சிறிலங்கா உள்ளிட்ட 191 நாடுகள் ஒப்பமிட்டுள்ளன.
இந்தப் பிரகடனத்தின் 1வது மற்றும் 2வது, பிரிவுகளின்படி, கொழும்புத் துறைமுக நகரத்தில் சீனாவுக்குச் சொந்தமாக நிலம் வழங்கப்பட்டால், அதற்கு மேலாக உள்ள வான் பகுதியும் சீனாவுக்குச் சொந்தமானதாகவே இருக்கும்.
கொழும்புத் துறைமுக நகரத் திட்ட உடன்பாட்டின்படி, சீனாவுக்கு 108 ஹெக்ரெயர் நிலப்பரப்பு வழங்கப்படும். இதில் 88 ஹெக்ரெயர், 99 ஆண்டு குத்தகைக்கும், 20 ஹெக்ரெயர் சீனாவுக்குச் சொந்தமாகவும் வழங்கப்படும்.
சிக்காகோ பிரகடனத்தின் 1வது பிரிவில், ஒரு நாடு தனது பிராந்தியத்துக்கு மேலாக உள்ள வான்பரப்பில் தனியுரிமை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் இது குறித்து சுட்டிக்காட்டியுள்ளது மைத்திரி அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முட்டாள்தனமான செயற்பாட்டினால், சிறிலங்காவின் தனித்துவம் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.


Sri Lanka Rupee Exchange Rate