உலகக்கிண்ண வரலாற்றில் சங்கக்கார சாதனை: ஸ்கொட்லாந்தை வீழ்த்தியது இலங்கை
உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அதிகூடிய ஆட்டமிழப்புகளைச் செய்த விக்கெட் காப்பாளர் என்ற சாதனையை குமார் சங்கக்கார நிகழ்த்தியுள்ளார். இத...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_924.html

உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அதிகூடிய ஆட்டமிழப்புகளைச் செய்த விக்கெட் காப்பாளர் என்ற சாதனையை குமார் சங்கக்கார நிகழ்த்தியுள்ளார்.
இதற்கு முன்னர், அவுஸ்திரேலிய வீரர் அடம் கில்கிரிஸ்ட் 52 ஆட்டமிழப்புகளைச் செய்திருந்தார்.
இந்நிலையில், ஸ்கொட்லாந்திற்கு எதிராக இடம்பெற்ற இன்றைய போட்டியில், குமார் சங்கக்கார 54 ஆட்டமிழப்புகளைச் செய்து, அடம் கில்கிரிஸ்ட்டின் சாதனையை முறியடித்துள்ளார்.
இப்போட்டியில் இலங்கை 148 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, 9 விக்கெட்டுகளை இழந்து 363 ஓட்டங்களை பெற்றது.
தொடர்ந்து களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணி, 43.1 ஓவர்களுக்கு 215 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இதேபோட்டியில், சங்கக்கார தொடர்ச்சியாக நான்கு சதங்களைப் பெற்ற ஒரே வீரர் என்ற சாதனையையும் நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate