பரீத் கானின் ஜனாஸா மக்கள் திரளில் நல்லடக்கம் செய்யப்பட்டது....!!

நாகாலாந்து மாநிலத்திலுள்ள ராணுவ குடும்பத்தை சேர்ந்த செய்யத் பரீத்கானிடம் ரூ 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டி பணம் பறிக்க முயன்ற நாகா இன ப...


Featured image

நாகாலாந்து மாநிலத்திலுள்ள ராணுவ குடும்பத்தை சேர்ந்த செய்யத் பரீத்கானிடம் ரூ 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டி பணம் பறிக்க முயன்ற நாகா இன பெண்ணிடம் பணம் தர மறுத்ததால் அப்பெண் தம்மை செய்யத் பரீத் கான் கற்பழித்ததாக புகார் தெரிவித்ததையடுத்து செய்யத் பரீத்கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நாகா இன மக்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறைக்கதவை உடைத்து சிறையிலிருந்து வெளியில் இழுத்து வந்து செய்யத் பரீத் கானை முழு நிர்வாணமாக்கி சாலைகளில் ஊர்வலமாக இழுத்து சென்று பின்னர் அடித்தே படுகொலை செய்தனர்.
 பின்னர் அந்த பெண் கற்பழிக்கப்படவில்லை என்று மருத்துவ அறிக்கை கூறியதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
 இந்நிலையில்....
 படுகொலை செய்யப்பட்ட செய்யத் பரீத்கான் ஜனாஸாவை பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டு அவருக்காக இறைவனிடம் மன்னிப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
 (இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்....) 
 அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட செய்யத் பரீத் கானுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஷஹீத் என்னும் உயரிய அந்தஸ்தை கொடுத்து சுவர்க்க சோலைகளில் சுவாசிக்க செய்வானாக....
 உள்ளூர் ஊடகம் முதல் உலகளாவிய ஊடகம் வரை செய்யத் பரீத் கானை கற்பழிப்பு குற்றவாளியாக கருதி அவரது முழு நிர்வாண கோலத்தை படம் பிடித்து காட்டியது.
 இஸ்லாத்தின் மீது ஊடகங்கள் யுத்தமே நடத்தியுள்ளது என்றும் கூறலாம். 
 இந்த படுகொலை மூலம் நாகா இன மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூக மக்களும் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்....
 ஒருவர் மீது ஒரு குற்றச்சாட்டு வருமேயானால் அக்குற்றம் சம்பந்தமாக தீர விசாரிக்காமல், முழு ஆதாரமும் இல்லாமல் அவசரப்படக்கூடாது, அவ்வாறு அவசரப்பட்டதால் ஓர் உயிர் இன்று நம் தேசத்தை விட்டு அநியாயமாக சென்று விட்டது.
 இந்த படுகொலையின் பின்னணியில் காவி இந்துத்துவ வெறியர்கள் எந்த அளவுக்கு செயல்பட்டுள்ளார்கள் என்பதை காலம் பதில் சொல்லும், அதுவரை இறைவனுக்கே வெளிச்சமாகும்.

Related

உலகம் 8500190553955735086

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item