சுயநினைவின்றி கிடந்த பெண் நோயாளிகள்: இரக்கமின்றி கற்பழித்த செவிலியர்
பிரித்தானியாவில் சுயநினைவின்றி அனுமதிக்கப்பட்ட பெண் நோயாளிகளை செவிலியர் ஒருவர் கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_766.html

பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்ட்(Oxford) நகரில் உள்ள ஜான் ராட்கிலிப்பி(John Radcliffe Hospital) என்ற மருத்துவமனையில் ஆண்ட்ரூ ஹச்சின்சன்(Andrew Hutchinson) என்ற ஆண் செவிலியர் 2011-2013 ஆண்டுகளில் பணியாற்றி வந்துள்ளார்.
இவர் மருத்துவமனைக்கு சுயநினைவின்றி வந்த 10 முதல் 35 வயதுடைய பெண் நோயாளிகள் மற்றும் குழந்தைகளை ரகசிய கமெரா மூலம் கண்காணித்துள்ளார்.
இதன்பின்னர், மருத்துவமனை அறைகளில் திரை மறைவில் அனுமதிக்கப்பட்டிருந்த சுய நினைவு இல்லாத பெண் நோயாளிகள் 4 பேரை இரக்கமின்றி கற்பழித்துள்ளார்.
சுமார் இரண்டு வருடங்களாக இந்த காமக்கொடூரனின் செயல்கள் மருத்துவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தாததால், தனது லீலைகளை தொடர்ந்து அரங்கேற்றியுள்ளார்.
மருத்துவமனை மட்டுமின்றி மற்ற பொது இடங்களிலும் அழகிய பெண்களை அவர்களுக்கு தெரியாமல் கமெராவில் கண்காணித்து வந்துள்ளான்.
இவனது இந்த செயல்பாடுகள் கடந்த நவம்பர் 2013ம் ஆண்டில் தேம்ஸ் வெலி(Thames Valley) பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால், அவனை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து செவிலியர் மருத்துவமனையில் அரங்கேற்றிய கற்பழிப்புகள் பொலிசாருக்கு கடந்த டிசம்பர் மாதம் தெரியவர, உடனே அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவனை உடனடியாக பணியிலிருந்து நீக்கியது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகியான மார்க் பவர்(Mark Power) பேசுகையில், செவிலியரை பொலிசார் கைது செய்திருக்காவிட்டால், அவன் பல நோயாளிகளை கற்பழித்திருப்பான் என்றும், தற்போது சுயநினைவில்லாத பெண் நோயாளிகளை ‘எந்த வித திரைமறைவும்’ இல்லாமல் வெளிப்படையான அறைகளில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம் எனவும் பேசியுள்ளார்.
சமீபத்தில், செவிலியர் வழக்கின் தீர்ப்பை வரும் ஏப்ரல் மாதம் 27ம் திகதிக்கு, ஆக்ஸ்போர்ட் கிரவுன்(Oxford Crown) நீதிமன்ற நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்


Sri Lanka Rupee Exchange Rate