கழிவறையில் கிடந்த மிரட்டல் கடிதம்: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் (வீடியோ இணைப்பு)
வெடிகுண்டு மிரட்டலால் துருக்கிய விமானம் அவரசமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியின் இஸ்தான்புல்(...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_344.html

துருக்கியின் இஸ்தான்புல்(Istanbul) நகரிலிருந்து நேற்று துருக்கி ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 777 விமானம், பிரேசில் நாட்டின் சாவோ பாவுலோவுக்கு(Sao Paulo) 256 பயணிகளுடன் புறப்பட்டு சென்றுள்ளது.
அந்த விமானத்தின் கழிவறையில் இருந்து கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில் விமானத்தில் வெடிகுண்டு உள்ளது என எழுதப்பட்டு இருந்தது.
இதனையடுத்து விமானம் மொராக்கோவில்(Morraco) அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.
இதன்பின் உடனடியாக விமானத்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கபடவில்லை.
தற்போது இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Sri Lanka Rupee Exchange Rate