திருமணத்திற்கு முன்பு பாலியல் உறவா? நடுரோட்டில் கல்லால் அடித்து கொல்லப்பட்ட ஜோடி
ஈராக்கில் திருமணத்திற்கு முன்பு உறவு கொண்ட ஜோடி ஒன்றை ஐ.எஸ் தீவிரவாதிகள் கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_626.html

ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ் தீவிரவாதிகள் கொலை, கொள்ளை, கள்ளக்காதல், கற்பழிப்பு, ஓரினச்சேர்க்கை உள்ளிட்ட பல குற்றங்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஈராக்கின் மொசூல்(Mosul) நகரில் உள்ள திருமணமாகாத ஜோடி ஒன்று உடலுறவில் ஈடுபட்டது தீவிரவாதிகளுக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நகரின் சாலையில் அவர்களை இழுத்து வந்த தீவிரவாதிகள், அவர்களின் கண்களை கட்டி மண்டியிட செய்துள்ளனர்.
இதன்பின் அவர்கள் புரிந்த குற்றத்தை தீவிரவாதி ஒருவன் மக்களுக்கு ஒலிபெருக்கியின் மூலம் அறிவிக்கின்றான்.
இறுதியில் தீவிரவாதிகள் அனைவரும் சேர்ந்து அவர்களை கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர், இச்சம்பவத்தை அங்கு கூடியிருந்த மக்கள் வேடிக்கை பார்த்துள்ளனர்.


Sri Lanka Rupee Exchange Rate