வடகொரியாவை ஆக்கிரமிக்க முயற்சியா? தென் கொரியா- அமெரிக்கா போர் ஒத்திகை
வடகொரியாவிற்கு எதிராக தென் கொரியா மற்றும் அமெரிக்க ராணுவப் படைகள் இணைந்து கூட்டு போர் ஒத்திகையை நிகழ்த்தியுள்ளன. கடல் வழியாக தங்களது எத...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_573.html

வடகொரியாவிற்கு எதிராக தென் கொரியா மற்றும் அமெரிக்க ராணுவப் படைகள் இணைந்து கூட்டு போர் ஒத்திகையை நிகழ்த்தியுள்ளன.
கடல் வழியாக தங்களது எதிரி நாடான வடகொரியாவின் நிலப்பரப்பை ஆக்கிரமிப்பதற்காக இந்த ஒத்திகை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சுமார் 7,600 வீரர்கள் பங்கேற்ற இந்த ஒத்திகையில், 80 போர் விமானங்கள், 30 கப்பல்கள், ஏராளமான கவச வாகனங்கள், டாங்குகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்தப் போர் ஒத்திகைக்கு, வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த ஒத்திகை ஒரு தற்காப்புப் பயிற்சிதான் என அமெரிக்காவும், தென் கொரியாவும் கூறினாலும், தங்களை சீண்டுவதற்காகவும், தங்கள் நாட்டை ஆக்கிரமிப்பதற்கான ஆயத்தமாகவுமே இந்தப் போர் ஒத்திகை நடத்தப்படுவதாக வடகொரியா குற்றம்சாட்டி வருகிறது


Sri Lanka Rupee Exchange Rate