பௌத்தன் என்ற வகையில் நான் பெருமையடைகின்றேன் -ஜனாதிபதி
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையால் இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான உறவு வலுவடைந்துள்ளமையால் இன்று நான் மிகவும் சந்தோஷ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_503.html
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்த போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 28 ஆண்டுளுக்கு பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் இலங்கை வந்துள்ளார். பௌத்தம் மற்றும் இந்து மதங்களால் இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே ஆதி காலம் தொட்டு நெருங்கிய தொடர்பு உள்ளது. இலங்கை பௌத்தன் என்ற வகையில் நான் இதற்காக பெருமையடைகின்றேன்.
இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் வியாபாரம், கடல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான வருகை இலங்கை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக நினைக்கின்றேன். அவரை நாம் கௌரவிக்கும் வகையிலேயே இன்று பாராளுமன்றத்திற்கு அழைத்துள்ளளோம் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.


Sri Lanka Rupee Exchange Rate