மஹிந்த எனது குடும்பத்தையே அழிக்கத் திட்டமிட்டிருந்தார் – ஜனாதிபதி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமது குடும்பத்தையே அழிப்பதற்கு திட்டமிட்டிருந்தார் என தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_394.html

எனதும் எனது குடும்ப உறுப்பினர்களினதும் பாதுகாப்பு காரணங்களுக்காக நான் குருணாகல் பிரதேசத்தில் நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தேன்.
பி.பி.சீ செய்தி சேவைக்கு வழங்கிய நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்திருந்தால் என்னைக் கைது செய்யவும்ää குடும்ப உறுப்பினர்களை அழிக்கவும் மஹிந்த ராஜபக்ஸ திட்டமிட்டிருந்தார்.
தேர்தல் முடிவுகள் மற்ற பக்கத்திற்கு சென்றிருந்தால் நானும் எனது குடும்பத்தினரும் உயிருடன் இருந்திருப்போமா என்பது தெரியவில்லை.
அதுதான் மஹிந்த ராஜபக்சவின் ஜனநாயகமாகும்.
தேர்தலில் தோற்றியிருந்தால் எத்தனை பேர் கொல்லப்பட்டிருப்பார்கள்ää எத்தனை பேரின் கை கால்கள் உடைக்கப்பட்டிருக்கும்ää எத்தனை பேரின் தொழில்கள் இழக்கப்பட்டிருக்கும் என்பது தெரியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate