முருகேசு பகீரதி விடுதலை: வெளிநாடு செல்லத் தடை!
கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் கடற்படை தலைவி என கருதப்படும் முருகேசு பகீரதி கொழும்பு நீதவான் நீதிமன்றால்...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_643.html

பிரான்ஸ் நோக்கிச் செல்லவிருந்த பகீரதி தனது எட்டு வயது மகளுடன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாகவும் ஆனால் அவரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.
அதன்படி பகீரதியை 2 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல உத்தரவிட்டார். அத்துடன் அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும் தான் வசிக்கும் பிரதேச பொலிஸ் நிலையத்திற்கு வாரத்திற்கு ஒருமுறை செல்லுமாறு நீதவான் பணித்துள்ளார்.
2005-ம் ஆண்டில் பிரான்ஸ் சென்றிருந்த பகீரதி, தனது 8 வயது மகளுடன் இலங்கை வந்து கிளிநொச்சியிலுள்ள அவரது பெற்றோருடன் ஒருமாத விடுமுறையை கழித்துவிட்டு, பிரான்ஸ் திரும்பும் வழியிலேயே விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்


Sri Lanka Rupee Exchange Rate