சிலியில் கடுமையான காட்டுத்தீ!:ஆயிரக் கணக்கானவர்கள் வெளியேற்றம்

சிலியில் கடந்த இரு நாட்களாகக் கடுமையான காட்டுத் தீ பரவி வருவதுடன் அந்நாட்டுத் துறைமுக நகரங்களான வல்பரைசோ மற்றும் வினா டெல் மார் ஆ...










    சிலியில் கடந்த இரு நாட்களாகக் கடுமையான காட்டுத் தீ பரவி வருவதுடன் அந்நாட்டுத் துறைமுக நகரங்களான வல்பரைசோ மற்றும் வினா டெல் மார் ஆகியவற்றை நோக்கி அது வேகமாக முன்னேறி வருகின்றது. இதன் காரணமாக ஆயிரக் கணக்கான மக்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

    மேலும் காட்டுத்தீயினால் ஏற்பட்ட புகை காரணமாக கடற்கரை நகர வானத்தை ஆக்கிரமித்துள்ள ஆரெஞ்சு நிற சுவாலைகளைப் படம் பிடித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

    வெள்ளிக்கிழமை பகல் சட்ட விரோதமான குப்பைக் கூடம் ஒன்றிலேயே இக்காட்டுத்  தீ ஆரம்பித்தது என்றும் வேகமாக வீசி வரும் காற்றினால் இது விரைவாகப் பரவியதாகவும் கூறியுள்ள அதிகாரிகள் இதனால் அதிகமாகப் பாதிக்கப் பட்டு வரும் பகுதிகளில் அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. சிலியின் உட்துறை அமைச்சின் பிரதிச் செயலாளர் மஹ்முட் அலேயு தெரிவிக்கையில் இக்காட்டுத் தீயால் சுமார் 6 நகரங்களைச் சேர்ந்த 4500 பொது மக்கள் வெளியேற்றப் பட்டுள்ளதாகவும் மேலும் 10 000 குடிமக்கள் தமது வதிவிடங்களை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். எனினும் இதுவரை 67 வயதுடைய பெண்மணி ஒருவரே இந்த அனர்த்தத்தில் பலியாகி இருப்பதாகவும் 10 பேர் எரிகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. நேற்று மாலை வரை 300 ஹெக்டேர் நிலம் தீயால் நாசமாகி இருப்பதாக சிலியின் அவசரநிலை அலுவலகம் தெரிவித்துள்ளது. தற்போது தீயை அணைக்க நூற்றுக் கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

    ஏப்பிரல் 2014 இல் இதே பகுதியைத் தாக்கியிருந்த காட்டுத் தீயால் 15 பேர் பலியாகியும் 500 பேர் வரை காயம் அடைந்தும் 2900 வீடுகள் சேதமடைந்தும் இருந்தன. சிலி தலைநகர் சண்டியாகோவில் இருந்து வட மேற்கே 75 மைல் தொலைவில் அமைந்துள்ள வல்பரைசோ நகர்ப்பகுதி 2003 ஆம் ஆண்டில் உலகின் பாரம்பரிய முக்கியத்துவம் மிக்க இடமாக யுனெஸ்கோவால் பிரகடனப் படுத்தப் பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை பசுபிக் சமுத்திரத்தில் அவுஸ்திரேலியாவுக்கு அண்மையில் அமைந்துள்ள வனௌட்டு தீவுகள் பகுதியினைத் தாக்கிய சைக்கிளோன் புயலான பாம் இனால் குறைந்தது  6 பேர் கொல்லப் பட்டிருப்பதாக இன்று யுனிசெஃப் அறிவித்துள்ளது. சுமார் 260 000 மக்கள் தொகையைக் கொண்டுள்ள இத்தீவுப் பகுதிகளில் இச்சூறாவளியால் பலியானவர்கள் தொகை மேலும் அதிகரிக்கலாம் என தொண்டூழியர்கள் அச்சம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    Related

    உலகம் 9188764242813567172

    Post a Comment

    emo-but-icon

    Advertise Your Ad Here

    Advertise Your  Ad Here

    Connect Us

    Side Ads

    Hot in week

    Recent

    item