மியான்மார் படகு விபத்தில் 50 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அச்சம்!

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மாரில் கடற்கரை நகரான சிட்வேயில் இருந்து அளவுக்கதிகமாக சுமார் 209 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த படகு...











    தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மாரில் கடற்கரை நகரான சிட்வேயில் இருந்து அளவுக்கதிகமாக சுமார் 209 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த படகு மியாய்போன் மற்றும் ம்யௌக்கைன் தீவுகளுக்கு அருகே மோசமான கால நிலையால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 50 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அஞ்சப் படுவதாக இன்று சனிக்கிழமை மியான்மார் அரச அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

    மீட்புப் பணிகள் உடனடியாக முடுக்கப் பட்டதுடன் 20 சடலங்கள் இதுவரை மீட்கப் பட்டுள்ளதுடன் 27 பேரை இன்னமும் காணவில்லை என அறிவிக்கப் பட்டுள்ளது. பாரிய அலைகளால் கவிழ்க்கப் பட்ட இப்படகில் பயணித்தவர்களில் 167 பேர் காப்பாற்றப் பட்டுள்ள அதே நேரம் காணாமற் போனவர்களில் பெரும்பாலானவர்கள் நீரில் மூழ்கிப் பலியாகி இருக்கலாம் என்றும் நம்பப் படுகின்றது. மேலும் பல பதிவு செய்ய படாத பயணிகளுடன் பயணித்த இப்படகில் விபத்தில் பலியானவர்கள் தொகை இன்னமும் அதிகரிக்கலாம் என்றும் ஊகிக்கப் படுகின்றது. மியான்மாரில் சிறிய மற்றும் பழமையான படகுகளில் அளவுக்கதிகமான எண்ணிக்கையில் மக்கள் பயணிப்பதால் அங்கு படகு விபத்துக்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேவேளை சீனா மியான்மார் எல்லையில் சீனாவின் கரும்பு உற்பத்திப் பிரதேசத்தின் மீது மியான்மார் யுத்த விமானங்கள் தமக்கு எதிரான கிளர்ச்சியாளர்களைத் தாக்குவதற்காக குண்டு வீசியதால் 4 பொது மக்கள் கொல்லப் பட்டிருப்பதாக சனிக்கிழமை சீனா அறிவித்துள்ளது. இதில் மேலும் 9 பேர் காயம் அடைந்துள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து உடனடியாகக் கண்காணிப்புக்காகவும் திருப்பித் தாக்குவதற்கும் என சீனா தனது யுத்த விமானங்களை அனுப்பியுள்ளது. மேலும் எல்லை நகரமான லிங்காங்கில் நிகழ்ந்த இத்தாக்குதலை அடுத்து பீஜிங்கிலுள்ள தனது மியான்மார் தூதருக்கு சீனா இது குறித்து விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியுள்ளது. இதைவிட சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சும் இக் குண்டுத் தாக்குதலுக்கு பின் இருப்பவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என மியான்மாருக்கு அழுத்தம் தெரிவித்துள்ளது. எனினும் இதற்கு உடனடியாக மியான்மார் எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

    சீனா மியான்மார் எல்லையோரமாக யுன்னான் மாகாணத்தில் பூர்விக பிரிவினைக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக மியான்மார் படைகள் பல வருடங்களாக சண்டையிட்டு வருகின்றது. சீனாவும் மியான்மாரும் சுமார் 2000 Km நீளமுடைய எல்லையைத் தமக்கிடையே பகிர்ந்து கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    Related

    உலகம் 6258775622870587832

    Post a Comment

    emo-but-icon

    Advertise Your Ad Here

    Advertise Your  Ad Here

    Connect Us

    Side Ads

    Hot in week

    Recent

    item