பாகிஸ்தானில் தேவாலயங்கள் மீது தற்கொலை படைத் தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு, 78 பேர் படுகாயம்

பாகிஸ்தானில் லாகூரில் கிறிஸ்துவ தேவாலயங்களில் தீவிரவாதிகள் நடத்தி தற்கொலை படைத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். 78-க்க...


பாகிஸ்தானில் லாகூரில் கிறிஸ்துவ தேவாலயங்களில் தீவிரவாதிகள் நடத்தி தற்கொலை படைத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். 78-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் யோகன்பாத் பகுதியில் உள்ள புனிதஜான் மற்றும் கிரிஷ் தேவாலயங்ளிலேயே தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது. ஞாயிற்று கிழமை சிறப்பு பிராத்தனை நடைபெற்று கொண்டு இருந்த போது தேவாலயங்களின் வளாகத்தினுள் நுழைந்த தீவிரவாதிகள் தங்களது உடலுடன் மறைத்து வைத்திருந்த வெடிக்குண்டை வெடிக்கச் செய்தனர். இதில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த 78-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர். போலீசார் விசாரணையை தொடங்கி உள்ள நிலையில் தேவாலயங்கள் அருகே தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்பட்ட இருவரை பொதுமக்கள் பிடித்து அடித்து கொன்றதாக கூறப்படுகிறுது. கிருஸ்துவ வழிப்பாட்டு தளங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்காததே சம்பவத்துக்கு காரணம் என கிறிஸ்துவர்கள் குற்றம்சாட்டினர்.

இதனிடையே இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த தலீபானில் இருந்து பிரிந்து சென்ற ஜமாத்-உல்- அக்ரார் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதேபோல கடந்த 2013-ம் ஆண்டு பெஷாவர் நகரில் உள்ள கிறிஸ்துவ தேவாலங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 80 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

Related

உலகம் 7391406412597676155

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item