உள்ளூராட்சி சபைகள் கலைப்பு தொடர்பில் 31ல் இறுதித் தீர்மானம்
உள்ளூராட்சி மன்றங்களை கலைப்பது தொடர்பில் இம்மாதம் 31ஆம் திகதி இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி...
http://kandyskynews.blogspot.com/2015/03/31.html
கட்சித் தலைவர்கள் உட்பட பலரிடம் இது தொடர்பாக கலந்து ரையாடல் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையக மான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் முடிவடைந்துள்ள நிலையில் அதனை கலைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உள்ளூராட்சி மன்றங்களை கலைத்து தேர்தலை நடத்துவது தொடர்பாக கட்சித் தலைவர்கள் உட்பட உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், அங்கத்தவர்களிடையே பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது.
தேர்தலை நடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் இம்மாதம் 31ஆம் திகதி இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். (tkn)



Sri Lanka Rupee Exchange Rate