பன்றிகாய்ச்சலால் மேலும் 30 பேர் உயிரிழப்பு:பலி எண்ணிக்கை 1,319 ஆக உயர்வு
பன்றிகாய்ச்சல் நோய்க்கு மேலும் 30 பேர் பலியானதாகவும், நாடு முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 1,319 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்த...


மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வரை எடுத்துள்ள புள்ளி விவரங்களின் படி, பன்றிக்காய்ச்சல் நோய்க்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 661 ஆக உயர்ந்துள்ளது.
பன்றிகாய்ச்சல் நோய்க்கு அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் 242 பேரும், ராஜஸ்தானில் 305 பேரும், மராட்டியத்தில் 201பேரும், கர்நாடகாவில் 55 பேரும்,தெலுங்கானாவில் 66 பேரும்,இதுவரையில் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.