சந்திரிகா திஹாரியில் ஆற்றிய உரையை பொதுபல சேனா புறக்கணிப்பு
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்ரடாநாயக குமாரதுங்க பொதுபல சேனா தொடர்பில் நேற்று திஹாரியில் தெரிவித்த கருத்தை புறக்கணிப்பதாக அந்த அமைப்பின் நி...


டெய்லி சிலோன் இணையத்தில் நேற்று வெளியான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, திஹாரில் ஆற்றிய உரையை மேற்கோள் காட்டியே அவர் இந்த ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவோ அல்லது ராஜபக்ஷ அரசாங்கத்தினாலோ பொதுபல சேனா உருவாக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்ரடாநாயக தெரிவித்த கருத்தை ஏற்றுகொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று அளுதகமையில் நடைபெற்ற கலவரம் தொடர்பில் பக்க சார்பட்ட விசாரணையை மேற்கொள்ளுமாறு மஹிந்த அரசிடம் வேண்டியது போன்று மைத்திரி அரசிடமும் பொதுபல சேனா அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)