ஜனாதிபதியாக இருந்து விட்டு பிரதமராக இருப்பது மிகவும் வெட்கக்கேடானது!– அமைச்சர் பௌசி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் வேறு சில கட்சிகளை சேர்ந்த நபர்களை நெருக்கடிகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக இடர் முகாமைத்துவ அமைச்சர...

http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_750.html
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் வேறு சில கட்சிகளை சேர்ந்த நபர்களை நெருக்கடிகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசியல் ரீதியான அகதிகளாக மாறப்போகிறோம் என்று அறிந்து கொண்ட சிலர் யாருடைய தோளில் ஏறியாவது நாடாளுமன்றத்திற்குள் வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிலரும் இதற்கு ஏமார்ந்து போயுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி பிரதமர் வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் கோருகிறாராம்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்து விட்டு பிரதமராக இருப்பது மிகவும் வெட்கக்கேடானது.
மகிந்த ராஜபக்ச பிரதமரானார் என்று வைத்து கொள்வோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்திற்கு வரும் போது பிரதமர் என்ற வகையில் மகிந்த ராஜபக்ச எழுந்து ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்த வேண்டும்.
மகிந்த ராஜபக்ச அதற்கு தயாரா எனவும் அமைச்சர் பௌசி கேள்வி எழுப்பியுள்ளார்.