மஹிந்த வழங்கிய இரட்டை குடியுரிமைகளை பறிக்கும் மைத்திரி

 சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இரட்டைக்குடியுரிமை குறித்து மீளாய்வு செய்யப்பட உள்ளதாக அமை...

n

 சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இரட்டைக்குடியுரிமை குறித்து மீளாய்வு செய்யப்பட உள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
 கடந்த அரசாங்கத்தினால் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட இரட்டைக் குடியுரிமை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட உள்ளது.
 கடந்த அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட இரட்டைக் குடியுரிமை முறைமை குறித்து மீளாய்வு செய்ய விசேட குழுவொன்று நியமிக்கப்பட உள்ளது.
 2010ம் ஆண்டு முதல் இரட்டைக்குடியுரிமை வழங்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டிருந்தது. எனினும், உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் சிலருக்கு மட்டும் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சிலருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க உயர் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 அதிகளவில் முஸ்லிம் மற்றும் தமிழ் குடும்பங்களுக்கு இவ்வாறு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 உரிய தகமைகளை பூர்த்தி செய்யாதவர்களின் இரட்டை குடியுரிமை தொடர்பில் மீளாய்வு செய்யப்படும். இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறையில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

இலங்கை 3486427905508472278

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item