சந்திரிக்கா ஓய்வுபெற்ற ஜனாதிபதி போல் நடந்து கொள்வதில்லை!– டலஸ் அழகபெரும

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியை அழிப்பதனை நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும முன்னாள் ஜனாத...

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியை அழிப்பதனை நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாரஹேன்பிட்டியவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்சியினை பிளவு படுத்துவதின் அவசியத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காக மீண்டும் மீண்டும் நிரூபித்து காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஓய்வு பெற்றதன் பின்னர் செயற்பட வேண்டிய முறை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவிடம் கற்றுக்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும கோரிக்கை ஒன்றினையும் முன்வைத்துள்ளார்.

சந்திரிக்கா ஓய்வுபெற்ற ஜனாதிபதி போல் நடந்து கொள்வதில்லை – டலஸ் அழகபெரும

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிரிவுகளை உருவாக்குவதை நிறுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு நாராஹேன்பிட்டி அபயராம விகாரையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்தும் தேவையுள்ளது.

மைத்திரிபால சிறிசேனவின் ஐக்கிய தேசியக் கட்சியுடனான உடன்படிக்கை 100 நாளில் முடிந்துள்ளது. எனினும் மைத்திரி – சந்திரிக்கா உடன்படிக்கை 5 ஆண்டுகளுக்கு தொடரும்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அரசியலில் இருந்து ஓய்வுபெற்று விட்டார். ஆனால் அரசியலில் ஓய்வு பெற்றவர் போல் அவர் நடந்து கொள்வதில்லை.

ஓய்வுபெற்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவர் மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவிடம் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் டலஸ் அழகபெரும கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தீவிர ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் அழகபெரும, கடந்த ஜனவரி 8ம் திகதி தோல்வியடைந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த மகிந்த ராஜபக்சவும் அரசியலில் ஓய்வுபெற வேண்டும் என்பதை மறந்து செயற்படுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related

தலைப்பு செய்தி 2783536417677059075

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item