வித்தியா கொலைவழக்கு சந்தேக நபர்களை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்க நீதிபதி உத்தரவு!
யாழ்.ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று நடைபெற்ற வித்தியா கொலைவழக்கு விசாரணையில் சந்தேக நபர்கள் 9 பேரையும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வி...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_677.html
சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் நடைபெற்ற இந்த விசாரணையில் சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இரண்டாம் இணைப்பு
யாழ்.புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 9 சந்தே கநபர்களையும் 30 நாட்களுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில் நீதிபதி லெனின் குமார் இந்த கட்டளையை பிறப்பித்துள்ளார்.
வழக்கு விசாரணையின்போது சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்மரணிகள் ஐனாதிபதியின் பணிப்பிற்கமைய குறித்த சந்தேகதபர்களால் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கப்பட்டதுடன், இனங்களுக்கிடையிலான நல்லுறவு பாதிக்கப்படுவதற்காக இவர்கள் இவ்வாறான கூட்டு வன்புணர்வை நடத்தியதாக சந்தேகம் உள்ளதாக குற்றம்சாட்டியதுடன்,
சந்தேகநபர்களை குற்றப்புலனாய்வு துறையினர் 30 தினங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரிக்க உத்தரவு கேட்டிருந்தனர்.
இதற்கமைய குறித்த உத்தரவினை நீதிபதி வழங்கியதுடன் இன்றைய தினமே சந்தேகநபர்களை குற்றபுலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கவும் உதவி தரவிட்டுள்ளார்