இராணுவத்தின் அதிகாரமும் பலமும் குறைந்து வருகிறது!- மெதகொட அபயதிஸ்ஸ தேரர்
வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு வருவதாகவும் இராணுவத்தின் பலமும் அதிகாரமும் குறைந்து வருகிறது எனவும் கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர் த...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_264.html
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை சிங்களவர்களின் நாடு என்று யார் கூறுகின்றனர் என நீதியமைச்சர் கேள்வி எழுப்புகிறார்.
வடக்கில் போர் குற்றவாளிகள் இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறுகிறார். வடக்கில் இராணுவத்தினர் ஊடாக போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாக அவர் குற்றம் சுமத்துகிறார்.
அதேவேளை விடுதலைப் புலிகள் இருந்த போது தமக்கு தற்போது இருப்பதை விட பாதுகாப்பு இருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேசிய கொடியில் மாற்றங்களை ஏற்படுத்தி. வைபவங்களின் போது ஏற்றுவதற்காக வேறு கொடி ஒன்றுக்கான அனுமதியை பெறுவதற்காக அந்த யோசனை அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஒரு கீதமாக இருந்த தேசிய கீதம் தற்போது இரண்டு கீதங்களாக பாடப்படுகின்றன எனவும் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் கூறியுள்ளார்.
மெதகொட அபயதிஸ்ஸ தேரர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.