அமெரிக்கா செல்ல முடியாத நிலையில் கோத்தபாய!
அமெரிக்க குடியுரிமையைக் கொண்டிருந்தாலும், அங்கு செல்ல முடியாத நிலைமையை எதிர்நோக்கியுள்ளார் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச. ...


கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரர் தோல்வியடைந்ததை அடுத்து கோத்தபாயவின் மற்றுமொரு சகோதரரான பசில் ராஜபக்ச அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். ஆனால், தாம் கைது செய்யப்பட்டால் பாரதூரமான நிலைமையை எதிர்நோக்க வேண்டியேற்படும் என்ற அச்சம் காரணமாக கோத்தபாய அமெரிக்காவுக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.
மகிந்தவின் தோல்விக்கு பின்னர் தற்போதைய அரசாங்கம் கோத்தபாய மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள போதிலும் அவரை கைது செய்ய தவறியுள்ளதாக குற்றம்சுமத்தப்படுகிறது.