அரச ஊழியர்களின் சம்பள உயர்வு மேலும் 2000 ரூபாவாக அதிகரிப்பு! - தனியார் பணியாளர்களுக்கு 2500ரூபா மேலதிக கொடுப்பனவு! பிரேரணை முன்வைப்பு
அரசாங்க ஊழியர்களுக்கான 2000 ரூபா சம்பள உயர்வு இந்த மாதத்திலிருந்து வழங்கப்படவுள்ளதாக திறைசேரியின் துணைச் செயலாளர் எஸ்.ஆர். அர்ரி கலே தெரிவ...

http://kandyskynews.blogspot.com/2015/06/2000-2500.html

நிதியமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த தேர்தலின் போது அரசாங்கம் பொதுமக்களுக்கு உறுதியளித்தவாறே ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் முறையே 5000 மற்றும் 3000 சம்பள உயர்வு வழங்கப்பட்டது.
அத்துடன் இம்மாதம் வழங்கப்படவுள்ள 2000 ரூபாவினையும் கருத்திற் கொள்ளும் போது, இதன்படி அரசு மக்களுக்கு உறுதியளித்த 10,000 சம்பள உயர்வானது நிறைவேறும் எனவும் அவர் தெரிவித்தார்.
எனவே இந்த மாதத்திலிருந்து சம்பள உயர்வானது சாத்தியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் பணியாளர்களுக்கு 2500ரூபா.தனிநபர் பிரேரணை முன்வைப்பு
வரவு செலவுத் திட்டத்தின் 2500 ரூபா மேலதிக கொடுப்பனவை தனியார் பணியாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கும வகையிலான தனிநபர் பிரேரணை ஒன்றை முன்னிலை சோசலிஸக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்குமார இன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
இதற்கு முன்னதாக இன்று செவ்வாய் காலை செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இந்த பிரேரணைக்கான வரைபு ஏற்கனவே இறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே அதனை உடனடியாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார்.