பேஷன்பக்” நிருவன உரிமையாளரிடம் பலவந்தமாக பெற்றுக்கொண்ட வீட்டில் கோத்தா தஞ்சம் ! பேஷன் பக் நிறுவனம் விளக்கம்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததை தொடர்ந்து அவரின் குடும்ப ஊழல்கள் தொடர்பாக தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ள நிலையில் இலங்கையின் ...


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததை தொடர்ந்து அவரின் குடும்ப ஊழல்கள் தொடர்பாக தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ள நிலையில் இலங்கையின் முன்னணி ஆடை நிறுவனமான பேஷன் பக் நிறுவனத்தின் உரிமையாளரிடம் இருந்து பலாத்காரமாக பெற்றுக்கொண்ட வீட்டில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபா ராஜபக்ஷ தஞ்சம் புகுந்துள்ளதாக செய்திகள் பரவ தொடங்கியுள்ளது.
குறித்த செய்தி தொடர்பாக மடவளை நியுசுக்கு கருத்து வெளியிட்ட எமது அனுரசனை நிறுவனமான பேஷன் பக் நிறுவனத்தின் பிரதான முகாமையாளர் முஹம்மத் பராஸ் தமது நிறுவன உரிமையாளருக்கு குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசத்தில் வீடு ஒன்று இல்லை எனவும் பேஷன் பக் நிறுவன உரிமையாளரிடம் இருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் எந்த ஒரு வீட்டையும் கொள்வனவு செய்யவோ பலாத்காரமாக பெறவோ இல்லை என குறிப்பிட்டார்.
சில ஊடகங்கள் பரபரப்புக்காக இவ்வாறான செய்திகளை வெளியிடுகின்றன நிச்சயமாக பாதுகாப்பு செயலாளர் எமது நிறுவனம் சம்பந்தப்பட்டவர்களிடம் எந்த ஒரு வீட்டையும் கொள்வனவு செய்யவோ பலாத்காரமாக பெறவோ இல்லைஅவர் மேலும் குறிப்பிட்டார்.