சிரியா செல்லவிருந்த ஜப்பானிய பிரஜையின் கடவுச்சீட்டு பறிமுதல்
ஜப்பானிய சுயாதீன நிழற்படக் கலைஞர் ஒருவர் சிரியாவுக்குச் செல்வதை தடுப்பதற்காக ஜப்பானின் வெளியுறவு அமைச்சு அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய...


ஜப்பானிய பிரஜை ஒருவருக்கு எதிராக அந்நாட்டு அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கையை எடுத்துள்ளமை இதுவே முதற்தடவை.
ஒருவரின் உயிரைப் பாதுகாப்பதற்காக அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்வதற்கு அந்நாட்டு அதிகாரிகளுக்கு அனுமதி உள்ளது.
சிரியாவுக்கு செல்லும் திட்டத்தை கைவிடுமாறு யூச்சி சுகிமோட்டோவிடம் பேசி இணங்கச் செய்யமுடியாமல் போன நிலையிலேயே அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
ஜப்பானிய அரசாங்கம் தனது பேச்சு சுதந்திரத்தை மீறுவதாக யூச்சி சுகிமோட்டோ கூறியுள்ளார்.
இரண்டு ஜப்பானிய பிரஜைகள் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளால் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.