சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக் எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் இதுவரை 115 பேர் கையெழுத்திட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அறிவித்திருக்கும் நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படுவதைத் தடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் எதிர்க்கட்சியினருடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டு வருவதாக அறிய முடிகிறது.


தற்போதைய பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வசமே இருக்கும் நிலையில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு எனும் அடிப்படையிலேயே அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவை வழங்கி வருகின்றன. எனவே, பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றின் மூலம் அமைச்சர் ஒருவர் பதவி நீக்கப்படுவது தற்போதைய அரசுக்க பாரிய பின்னடைவை மாத்திரமன்றில் அதன் பலம் குறித்த கேள்விகளையும் சந்தேகங்களையும் மக்கள் மத்தியில் விதைக்கும் நிலை உருவாகும் என்பதால் சட்ட ஒழுங்கு தொடர்பிலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் மீது தாக்குதல்கள் நடக்காத வண்ணம் கூடுதல் கவனம் செலுத்துவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சு.க முக்கியஸ்தர்கள் குழுவிடம் வாக்குறுதியளித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் மூலம் அறியக்கிடைக்கிறது.