நஷ்டத்தில் இயங்கும் கோதாபயவின் வியாபாரத்தளங்கள்
கோதாபய ராஜபக்ஷவின் வழிகாட்டல் மற்றும் கண்காணிப்பின் கீழ் முப்படையினரைப் பயன்படுத்தி தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் கொழுப்பு நகரை அண்மித்து...

http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_462.html
கோதாபய ராஜபக்ஷவின் வழிகாட்டல் மற்றும் கண்காணிப்பின் கீழ் முப்படையினரைப் பயன்படுத்தி தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் கொழுப்பு நகரை அண்மித்து நிர்மாணிக்கப்பட்ட 5 வியாபார நிலையங்கள் மிகுந்த நஷ்டத்தை எதிர்நோக்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆகேட் இன்டிபென்டென்ட் தொகுதி கடந்த வருடம் ஜுலை முதல் செப்டம்பர் வரை ஒரு கோடியே முப்பத்தாறு இலட்சத்து எழுபத்து மூவாயிரத்து நானூற்றி அறுபத்தைந்து ரூபாய் நஷ்டமடைந்துள்ளது. இந் நிறுவனத்திற்காக 490 மில்லியன் ரூபாய் செலவளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரேஸ்கோஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வியாபரத் தொகுதியிலிருந்து இருபத்து மூன்று இலட்ச்சத்து மூவாயிரத்து அறுநூற்றுப் பதினோறு ரூபாய் கடந்த வருடம் ஜூலை முதல் செபடம்பர் வரை நஹ்ச்டம் ஏற்பட்டுள்ளது.இத் தொகுதிக்காக 660 மில்லியன் செலவளிக்கப்படிருந்தது குறிப்பிடத்தக்கது.
புறக்கோட்டை தனியார் பஸ் தரிப்பிடத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த மிதக்கும் சந்தை வியாபாரத் தொகுதியை நிர்மாணிக்க 134 மில்லியன் ரூபாய் செலவளிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த வருடம் ஜூலை முதல் செப்டம்பர் வரை மூன்று மாதங்களுக்கு எட்டு இலட்சத்து மூவாயிரத்து எண்ணூற்று இருபத்தைந்து ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு செட்டியார் தெரு நகைக்கடைகள் அருகே அமைக்கப்பட்டிருந்த கோல்ட் சென்டர் நிர்மாணிக்க 242 மில்லியன் செலவாகியதாகவும் இவ்வியாபரத்தொகுதியினால் இருபது இலட்ச்சத்து எண்பத்து மூவாயிரத்து இருநூற்று அறுபத்து நான்கு ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
பழைய ஓலந்த வைத்தியசாலையை மையப்படுத்தி அமைக்கப்பட்ட வியாபரத்தொகுதியினால் மட்டும் கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரை 60இலட்சம் வரை நஷ்டம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இத் தொகுதியை அமைக்க 2௦2 மில்லியன் செலவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.