இஸ்லாமிய மாணவர்களை சுட்டுக் கொன்ற நாத்திகனின் பகீர் வாக்குமூலம் (VIDEO, PHOTO)
அமெரிக்காவில் இஸ்லாமிய மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சேப்பல் ஹில்ஸ்(...

http://kandyskynews.blogspot.com/2015/02/video-photo.html
அமெரிக்காவில் இஸ்லாமிய மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சேப்பல் ஹில்ஸ்(Chapel Hills) பகுதியில் வசித்து வந்த டியா ஷேடி பராக்கத்(Deah Shaddy Barakat Age-23), அவரது மனைவி யூசுர் அபுசல்ஹா(Yusor Mohammad Age-21) மற்றும் சகோதரி யூசுரின் ரஸான் அபுசல்ஹா(Razan Mohammad Abu-Salha Age-19) என்ற 3 இஸ்லாமிய மாணவர்கள் வடக்கு கரோலினா(North Carolina University) பல்கலைக்கழக்கத்தில் பயின்று வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இவர்களது குடியிருப்புக்குள் புகுந்த ஸ்டீபன் ஹிக்ஸ்(Stephen Hicks Age-46)என்ற நபர், 3 பேர் மீதும் சரமாரியாக துப்பாக்கிச்சூட்டை நடத்தி கொலை செய்துள்ளார்.
இதன்பின் வடக்கு கரோலினா பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே, ஸ்டீபன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டுள்ளார்.
இத்தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிசார் ஸ்டீபன் ஹிக்ஸை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் இவர் நாத்திகவாதி என்பதும், மதங்களுக்கு எதிராக பேஸ்புக்கில் கருத்துக்களை பதிவேற்றம் செய்ததும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கொலை குற்றம் உட்பட மூன்று பிரிவுகளில் ஸ்டீபனை கைது செய்த பொலிசார், துர்ஹம் கவுண்டி(Durham County) சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் மதத்தின் மீதான வெறுப்பினால் தான் இவ்வாறு கொடூர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது என பலியான மாணவர்களின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.