3000 ரூபா இடைக்கால கொடுப்பனவுடன் அரச ஊழியர்களுக்கு 8000 ரூபா சம்பள அதிகரிப்பு
2015 வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் படி அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வின் 5000 ரூபாவை பெப்ரவரி மாதம் முதல் வழங்குமாறு பொதுநி...

http://kandyskynews.blogspot.com/2015/02/3000-8000.html

தற்போது வழங்கப்பட்டு வரும் 3000 ரூபாவுக்கு மேலதிகமாகவே இந்த 5000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறு சகல அமைச்சுகளின் செயலாளர்கள். மாகாண செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள். கூட்டுத்தாபனங்கள். சபைகள் உள்ளிட்ட அரச சார்பு நிறுவனங்களின் தலைவர்களுக்கும் சுற்று நிருபம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவுடன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடக்கம் 1000 ரூபாவை மேலதிக கொடுப்பனவாக வழங்குமாறும் இந்த சுற்றுநிருபத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 3000 இடைக்கால கொடுப்பனவுடன் பெப்ரவரி மாதம் முதல் வழங்கப்படும் 5000 ரூபாவையும் சேர்த்து அரச ஊழியர்களுக்கு 8000 ரூபா பெப்ரவரி மாதம் முதல் கிடைக்கும். எஞ்சிய 2000 ரூபா எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக சுற்று நிருபத்தின் மூலம் அறிவிக்கப் பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் சகல அரச ஊழியர்களுக்கும் 10,000 ரூபா சம்பள அதிகரிப்பாக கிடைக்கும்.