ஒரு முஸ்லிம் அரசியல்வதியின் நடவடிக்கைகளால் சிங்கள மக்கள் மத்தியில்…..
இனங்களுக்கு இடையே முறுகல் நிலையை தோற்றுவிக்கும் வகையில் ஒரு அரசியல்வாதியின் செயற்பாடுகள் அமைந்துள்ளது மிகவும் கவலையளிப்பதாக மேல் மாகாண ...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_404.html

இனங்களுக்கு இடையே முறுகல் நிலையை தோற்றுவிக்கும் வகையில் ஒரு அரசியல்வாதியின் செயற்பாடுகள் அமைந்துள்ளது மிகவும் கவலையளிப்பதாக மேல் மாகாண சபை உறுப்பினரும் கொழும்பு மத்தி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜியார் தெரிவித்தார். நேற்று கொழும்பு புதுக்கடை பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது காரியாலத்தில் வைத்து ஊடகவியலளார்கள் சமகால அரசியல் தொடர்பாக கேள்வி எழுப்பியபோது இதனை குறிப்பிட்டார்.
முஸ்லிம்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்த சில கடும்போக்கு வாதிகள் தமது அடுத்த நடவடிக்கைகள் தொடர்பான திட்டம் ஏதும் இல்லாமல் தங்கள் வாய்களை மூடிக்கொண்டு இருந்தனர். மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு கூட்டம் தொடர்பாக கருத்து வெளியிட்டு விமர்சனங்களையும் விளம்பரங்களையும் ஏற்படுத்தி கொடுத்த ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதி தொடர்பாக சிங்கள மக்கள் அதிருப்தி அடைந்துள்ளமையை முகநூலில் வெளியாகும் கருத்தக்கள் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளதை எம்மால் அவதானிக்க முடிகிறது.
இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திகொண்ட கடும்போக்கு அமைப்பினர்கள் முஸ்லிம்கள் தொடர்பாக காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். அவர்களுக்கு தீனி போடும் வகையில் குறிப்பிட்ட அரசியல் வாதியின் கடும்பேச்சுக்களை சில அரசியல் நடத்தும் ஊடகங்கள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி சிங்கள மக்கள் மத்தியில் கோபத்தை தூண்டும் வகையில் நடந்துகொள்வதை அவதானிக்க முடிகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள நல்லாட்சி முஸ்லிம் மக்கள் நிம்மதி பெருமூச்சுவிடும் வகையில் அமைந்துள்ளது இதனை அரசியல் வாதிகள் தமது விளம்பர நடவடிக்கைகளுக்காக பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்வதில் இருந்து தவிர்ந்துகொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கைகளால் சிங்கள மக்கள் ஜனாதிபதி தொடர்பாக வைத்திருக்கும் நன்மதிப்புக்கு களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என அவர் மேலும் குறிப்பிட்டார்


Sri Lanka Rupee Exchange Rate