மீண்டும் மஹிந்த! பரபரப்பாகும் கொழும்பு – தீவிர முயற்சியில் பா.உறுப்பினர்கள்
சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பாராளுமன்றத்திற் கொண்டு வர தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேசி...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_345.html

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பாராளுமன்றத்திற் கொண்டு வர தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தேசிய பட்டியலின் மூலம் மஹிந்தவை உள்வாங்கும் முயற்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் சார்பில் வழங்கப்பட்ட தேசிய பட்டிலியலில் உள்ளவர்களை விலக வைத்து விட்டு, அவர்களுக்கு பதிலாக மஹிந்தவை கொண்டு வர, அவருக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து ஆராய்வதற்காக அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களான, மாலினி பொன்சேகா மற்றும் ஜனக பிரியந்த ஆகியோரை தொடர்புகொள்ள தீர்மானித்துள்ளனர்.
பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளதாகவும், எனினும் தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து இறுதி முடிவை எடுக்கவில்லையெனவும் தெரிய வருகிறது.
இதேவேளை தேசிய பட்டியல் மூலமாக நடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்கும் இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரிடமே உள்ளது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த ஆதரவு வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


Sri Lanka Rupee Exchange Rate