செவ்வாய் கிரகத்தில் குழந்தை பெற ஆசைப்படும் யுவதி!- வீடியோ இணைப்பு
மனிதர்களின் ஆசைகளுக்கு எல்லையே இல்லை என்று சொல்லாம். ஆனால் பிரித்தானிய பெண்ணொருவருக்கு வானகத்தையும் தாண்டி ஆசை வியாபித்துள்ளது. அவர்...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_108.html

மனிதர்களின் ஆசைகளுக்கு எல்லையே இல்லை என்று சொல்லாம். ஆனால் பிரித்தானிய பெண்ணொருவருக்கு வானகத்தையும் தாண்டி ஆசை வியாபித்துள்ளது.
அவர் செவ்வாய் கிரகத்தில் பிள்ளையொன்றை பெற்று அங்கையே மரணத்தை தழுவ வேண்டும் என்று விருப்பம் கொண்டுள்ளார்.
செவ்வாய்க் கிரகத்திற்கு 2024 ஆம் ஆண்டில் பயணத்தை மேற்கொள்ள விண்ணப்பித்த இறுதி 100 வேட்பாளர்களில் ஒருவருக்கே இந்த ஆசை ஏற்பட்டுள்ளது.
செவ்வாய்க் கிரகத்தில் குழந்தையை பிரசவிப்பதிலுள்ள அபாயங்கள் குறித்து அறியப்படாத போதிலும், தான் செவ்வாய்க் கிரகத்தில் முதலாவதாக குழந்தையை பிரசவிக்க எதிர்பார்த்துள்ளதாக 24 வயதான மகிலியு என்ற பெண் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க் கிரகத்துக்கான ஒரு வழிப் பயணத்துக்கு விண்ணப்பித்த சுமார் 200,000 விண்ணப்பதாரிகளில் இறுதியாக தெரிவு செய்யப்பட்ட100 பேரில் மகிலியு உள்ளடங்குகிறார்.
செவ்வாய்க் கிரகத்துக்கு பயணத்தை மேற்கொள்பவர்கள் அங்கிருந்து திரும்புவதற்கு விண்கல வசதியில்லாததால் அங்கு செல்லும் அனைத்து விண்வெளி வீரர்களும் அங்கேயே வாழ்ந்து உயிரிழக்க நேரிடும் .
இந்நிலையில் தனது தாயார் உட்பட தனது குடும்பத்தினர் அனைவரும் தனது பயணத்திற்கு ஆதரவளித்துள்ளதாக மகிலியு தெரிவித்துள்ளதுடன் மகிலியு அவரது பெற்றோருக்கு ஒரே மகளாவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate