சிறைச்சாலையில் கைதிகளை கொலை செய்த கோத்தபாய! அதிர்ச்சி தகவல்
கடந்த 2012ம் ஆண்டு வெலிக்கடை சிறையில் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன், கோத்தபாயவுக்கு தொடர்பு இருப்பதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_192.html

கடந்த 2012ம் ஆண்டு வெலிக்கடை சிறையில் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன், கோத்தபாயவுக்கு தொடர்பு இருப்பதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சியில் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சிறையில் ஏற்படும் பிரச்சினைகள் சிறை அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.
சிறையில் சில திருத்த முடியாத கைதிகள் இருந்தாலும் பெரும்பாலான கைதிகள் ஒழுக்கமானவர்கள் என்பதுடன் அதிகாரிகளும் சிறந்த முறையில் பணியாற்றக் கூடியவர்கள்.
அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும் சிறைக்கு அழைக்கப்பட்டதால், பிரச்சினை பெரிதானது.
கோத்தபாய ராஜபக்ஷ, தனது விசுவாசமான அதிகாரிகளை பயன்படுத்தியதுடன் சில, கைதிகளை குறி வைத்து கொலை செய்ததாக பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறையில், 2012 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் திகதி கலவரம் ஏற்பட்டதுடன் 27 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது குறித்து பல குழுக்கள் விசாரணைகளை நடத்திய போதிலும் விசாரணை அறிக்கைகள் வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த புதிய அரசாங்கம் விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளதுடன் விசாரணை அறிக்கை அடுத்த சில வாரங்களில் வெளியிடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate