பெரும் ஆபத்தில் நடுவானில் திசைதிருப்பப்பட்டுள்ள பிரெஞ்சு விமானம்
AF 267 விமானத்தில் 290 பயணிகளும் 18 விமானப் பணியாளர்களும் பெரும் அச்சத்திற்குள்ளாகி உள்ளார்கள். போயிங் 777-300 ரக எயார்பிரான்ஸ் விமானம்...

http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_384.html

AF 267 விமானத்தில் 290 பயணிகளும் 18 விமானப் பணியாளர்களும் பெரும் அச்சத்திற்குள்ளாகி உள்ளார்கள். போயிங் 777-300 ரக எயார்பிரான்ஸ் விமானம் தென்கொரியாவின் சியோல் நகரிலிருந்து பிரான்ஸ் நோக்கிப் புறப்பட்டது. நடுவானில் இந்த விமானத்திற்கு இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் திசை திருப்பப்பட்ட விமானம் ரஸ்யாவின் மத்திய பகுதியிலுள்ள Ekaterinbourg விமானநிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இதனை ஏயார்பிரான்சின் அவசர ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.
இயந்திரக் கோளாற்றினைத் தொடர்ந்து போயிங் நிறுவனத்தின் அலோசனைக்கு இணங்கியே இந்த விமானம் எக்தெரின்பேர்க்கில் தரையிறக்கப்பட்டுள்ளது. இயந்திரக் கோளாறு நடந்த சமயத்தில் பிரான்சினை அடைய இன்னமும் 5 மணித்தியாலங்கள் பறக்க வேண்டிய நிலையிலேயே விமானம் இருந்துள்ளது. அதனால் விமானி விபத்தினைத் தவிர்ப்பதற்காக பாதுகாப்பாக எக்தெரின்பேர்க்கில் விமானத்தைத் தரையிறக்கி உள்ளார். ரஸ்ய விமான விசாரணைப்பிரிவினர் இயந்திரக் கோளாற்றிற்கான காரணத்தை அறியும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
பயணிகள் கசக்ஸ்தான் அருகில் உள்ள எக்தெரின்பேர்க்கில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். எயார்பிரான்சின் அணியொன்று அவசரமாக அங்கு அனுப்பப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் நாளை பிரான்ஸ் கொண்டுவரப்படுவார்கள் என எயார்பிரான்ஸ் தெரிவித்துள்ளது.