நடிகர் ஜாக்கிசானின் மகன் 6 மாத சிறை வாசத்துக்குப்பின் விடுதலை
சீனாவில் நகர்ப்புறங்களில் போதைப்பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாதாரண மனிதர்கள் மட்டுமின்றி பல்வேறு...
http://kandyskynews.blogspot.com/2015/02/6_16.html

இதில் புகழ்பெற்ற நடிகர் ஜாக்கிசானின் மகனும், நடிகருமான ஜெய்சீ சானும் சிக்கினார். கடந்த ஆகஸ்டு மாதம் கைது செய்யப்பட்ட ஜெய்சீ சான் போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரது வீட்டில் இருந்து 100 கிராம் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.
அவர் மீது, போதைப்பொருள் பயன்படுத்தியது, போதைப்பொருள் பயன்படுத்தியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜெய்சீ சானுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை காலம் நேற்றுடன் முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்து ஜெய்சீ சான் நேற்று காலையில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சீனாவின் போதை ஒழிப்பு பிரிவின் விளம்பர தூதராக கடந்த 2009-ம் ஆண்டு ஜாக்கிசான் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate