லிபியாவில் தற்கொலைபடை தாக்குதலில் 45 பேர் பலி
லிபியாவின் கிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்களில் 45 பேர் உயிரிழந்தனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள...
http://kandyskynews.blogspot.com/2015/02/45.html

லிபியாவின் கிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்களில் 45 பேர் உயிரிழந்தனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிபியாவின் குப்பா நகரில் மூன்று தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. தற்கொலை வெடிகுண்டு தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனங்களை ஓட்டி சென்று வெடிக்க செய்துள்ளனர். லிபியாவின் பாராளுமன்ற சபாநாயகர் வீட்டின் அருகேயும், பாதுகாப்பு தலைமையகத்திலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதி என்றே கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களில் 45 பேர் உயிரிழந்தனர் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Sri Lanka Rupee Exchange Rate