புதிய வீட்டுக்கு மாதம் 12 இலட்சம் செலுத்தும் கோத்தாபய
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ச தான் வசிப்பதற்காக புதிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளது...

கோத்தபாய ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு அருகில் தனது புதிய வீட்டை தேர்ந்தெடுத்துள்ளார். கோட்டை தொகுதியின் ஊடாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தில் அவர் அங்கு குடியேறியுள்ளதாக பேசப்படுகிறது.
கோத்தபாய அரசியலில் ஈடுபடுவது அவரது தனிப்பட்ட உரிமை. அவரது சொத்துக்கள் தொடர்பாகவே கேள்விகள் எழுந்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
முன்னைய அரசாங்கத்தில் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய அரச அதிகாரி ஒருவர் எப்படி மாதம் 12 லட்சம் ரூபாவை வீட்டு வாடகையாக செலுத்த முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த பெருந்தொகை பணத்தை வாடகையாக செலுத்தும் அளவுக்கு எப்படி அவருக்கு சொத்துக்கள் கிடைத்தன என்பதும் பாரதூரமான பிரச்சினையாகும் என அந்த இணையத்தளம் கூறியுள்ளது.