ஹலீம் MPக்கு கண்டி வாழ் மக்கள் வாழ்த்து
மைத்தரிபால சிறிசேனவின் வெற்றி கண்டி மாவட்ட முஸ்லிம் சமூகத்தினுடைய இதயத்தில் சுமந்து எரிந்துகொண்டிருந்த ஜனநாயக வெற்றியாகும். இம்மாவட்டத்தில் ...
மைத்தரிபால சிறிசேனவின் வெற்றி கண்டி மாவட்ட முஸ்லிம் சமூகத்தினுடைய இதயத்தில் சுமந்து எரிந்துகொண்டிருந்த ஜனநாயக வெற்றியாகும். இம்மாவட்டத்தில் ஆட்சி மாற்றத்திற்காக அமைதிப் புரட்சிப் போராட்டத்தில் பங்கு கொண்ட சிங்கள மக்களுடன் நூற்றுக்கு நூறு விகிதம் முஸ்லிம் மக்களும் தம் பங்களிப்பை; செய்துள்ளனர். இதற்காகப் பாடுபட்ட கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஹலீமுக்கு முஸ்லிம் சமய கலாசார அமைச்சு வழங்கப்படுவதையிட்டு கண்டி மாவட்ட வாழ் மக்கள் பாராட்டுக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.
கண்டி மாவட்டத்தில் சுமார் 140000 முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்குகள் முழுமையாக பதிவு செய்யப்பட்டு இருக்குமாயின் கலப்பு இல்லாமல் ஒட்டுமொத்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே சென்று இருக்குமெனக் குறிப்பிடமுடியும். ஏனென்றால் இந்தப் பிரதேச முஸ்லிம்கள் கடந்த இரு வருட காலத்தில் பொதுபல சேன, இராவண பலய, சிங்கள இராவய போன்ற இயக்கங்களுடைய நெருக்கடியை எதிர்கொண்டவர்கள்.
இவர் 1980 ஆம் ஆண்டு காலப் பகுதியில் அமைச்சர் ஏ. சீ. எஸ். ஹமீதின் அந்தரங்கச் செயலாளராகவும் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் செயற்பட்டார். 1988 ஆம் ஆண்டு முதன் முதலாக அரசியலில் பிரவேசித்து மத்திய மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டார். இதற்குப் பின் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் மூன்று தடவைகள் வெற்றிபெற்றுள்ளார்.
அக்காலப் பகுதிகளில் பல்வேறு அமைச்சுப் பதவிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார். சுகாதார, விளையாட்டு ,போக்குவரத்து, சுற்றுலா, முஸ்லிம் கல்வி, கூட்டுறவுத் துறை. மகளீர் விவகாரம், முஸ்லிம் கலாசார அலுவல்கள் அமைச்சராகவும் இருந்தவர். அதேவேளை முதல் அமைச்சர் வெளிநாடுகளுக்குச் சென்ற பிற்பாடு பதில் முதல் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
அத்துடன் மறைந்த மூத்த அரசியல் தலைவர் அமைச்சர் ஏ. சீ. எஸ். ஹமீட் மறைவுக்குப் பின் கண்டி மாவட்டத்தில் ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளராகத் தெரிவு செய்யப்பட்டார். மறைந்த ஏ. சீ. எஸ் ஹமீத் அவர்களுடைய பாசறையில் வளர்ந்தவர் .அவரது மருகனும் கூட. இவர் 2000, 2001. 2005 ஆகிய தடவைகள் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவாமல் வெற்றியீட்டி தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுக் கொண்டவர்.
கடந்த காலங்களில் ஹஜ் விகாரம் தொடக்கம் பள்ளிவாசல் உடைப்பு பல்வேறு பிரச்சினைகளை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கினர். இதிலுள்ள இடையூறுகளையெல்லாம் களையெடுத்து இந்த நூறு நாட்களுக்கு சிறந்த இலக்கை அடைய வேண்டும் என்பது எங்களுடைய அவா. அத்துடன் சிங்கள பெரும்பான்மையின மக்களிடையே இந்த அமைச்சின் ஊடாக நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்தக் கூடிய வகையில் திறன் படச் செய்யவர் எனத் தெரிவு செய்து இந்த அமைச்சுப் பொறுப்பு தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என நாம் கருதுகின்றோம்.
எனவே மத்தியமாகாண சபையில் கடந்த காலங்களில் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் அமைச்சராக செயற்பட்ட அனுபவங்கள் உங்களுக்கு உண்டு. இந்த அமைச்சுப் பதவி கிடைப்பதையிட்டு கண்டி மாவட்ட வாழ் முஸ்லிம் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைவதுடன் பாராட்டுதல்களையும் தெரிவிக்கின்றோம் என கண்டி வாழ் மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
-இக்பால் அலி



Sri Lanka Rupee Exchange Rate