சில்லறை அமைப்புகள் பொதுபல சேனாவுக்கு சேறு பூசுகின்றன.

சில்லறை சங்கங்கள் மற்றும் பொறாமை பிடித்த எதிரிகளின் ஊடக அறிவிப்புக்கள் காரணமாக போதுபல சேனா அமைப்பு இன்னும் வலிமை பெரும் என அந்த அமைப்பின் பி...




சில்லறை சங்கங்கள் மற்றும் பொறாமை பிடித்த
எதிரிகளின் ஊடக அறிவிப்புக்கள் காரணமாக போதுபல
சேனா அமைப்பு இன்னும் வலிமை பெரும் என அந்த
அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி திலந்த
விதானகே தெரிவித்தார்.

இன்று அகில இலங்கை உணவக சங்க அமைப்பு
நடத்திய ஊடக சந்திப்பில் போதுபல சேனா மேல்
ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை முன் வைத்ததுடன் ஊழல்
ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும்
தெரிவித்தது. அதனை தொடர்ந்தே அவர் இதனை
தெரிவித்தார்.

சதிகாரர்கள் போதுபல சேனாவின் வேலைத்திட்டங்களை
நிறுத்துவதற்கும், உறுதியற்று போக செய்வதற்க்கும்
இவ்வமைப்பின் தலைவர்கள் மீது சேறு பூசும்
நடவடிக்கைகளை செய்ய ஆரம்பித்ததுடன்,

போதுபல சேனா அமைப்பினர் தீவரவாதி, இனவாதி,
கொலைகாரர்கள், மகிந்த அரசின் ஊதுகுழல், மகிந்த
அரசின் அனுசரணையில் வாழ்பவர்கள் எனவும் சில
சில்லறை அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும் அவர்
மேலும் தெரிவித்தார்.





Related

இலங்கை 7105465116062239307

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item