மைத்ரி யுகம் !அமைச்சர்களின் பாதுகாப்புக்கு ஒரு வாகனம் மட்டுமே அனுமதி ! முப்படை பாதுகாப்பு ரத்து….ரணில் அதிரடி
அமைச்சர்களுக்கு முப்படையினர் பாதுகாப்பு வழங்க கூடாது என முப்படை தளபதிகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அது தவிர...

அது தவிர அமைச்சர்களுக்கு அமைச்சு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு வழங்கினால் போதுமானது என அவர் பரிந்துரை செய்துள்ளார். வரும் தினங்களில் அமைச்சர்களுக்கு எத்தனை பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமிப்பது தொடர்பாக தீர்மானிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இது தவிர அமைச்சர்களின் பாதுகாப்புக்கு ஒரு பாதுகாப்பு வாகனம் தவிர அதிகமாக பயன்படுத்த வேண்டாம் என பிரதமர் ரணில் உத்தரவிட்டுள்ள அதேவேளை அமைச்சர்கள் பிரயாணம் செய்யும் போது பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் வண்ணம் செயற்பட வேண்டாம் என அவர் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.