மஹிந்த – கோத்தா – ஜி.எல்லுக்கு எதிராக மங்கள சமரவீர முறைப்பாடு
தேர்தல் முடிவுகள் வெளிவருவதை தடுக்க முனைந்தமைக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, மு...

தேர்தல் முடிவுகள் வெளிவருவதை தடுக்க முனைந்தமைக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல் பீரிஸ், நீதியரசர் மொஹான் பீரிஸ் ஆகியோருக்கு எதிராக குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர.
அவசர கால சட்டத்தை அமுல்படுத்தி தேர்தல் முடிவுகள் வெளியாவதைத் தடுப்பதற்கு முனைந்ததாகவே இம்முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் தான் அவ்வாறு எதுவும் செய்யவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சமூக வலைத்தளங்களிலும் இன்றைய தினம் எதிர்ப் பிரச்சாரம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.