சம்மாந்துறையில் தீயில் கருகி முஸ்லிம் தந்தையும் மகனும் மரணம்
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்மாயில் புறம் வளத்தாப்பிட்டி 01ம் பிரிவில் நேற்று இரவு (29.01.2015) இடம்பெற்ற தீ விபத்தில் த...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_647.html

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்மாயில் புறம் வளத்தாப்பிட்டி
01ம் பிரிவில் நேற்று இரவு (29.01.2015) இடம்பெற்ற தீ விபத்தில்
தந்தையும் அவரது இரண்டு வயது குழந்தையும் பரிதாபகமாக உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
இச்சம்பவத்தில் சின்னத்தபி ஆதம்லெப்பை வயது (43),மற்றும் இவரது
இரண்டுவயது ஆன் குழந்தையான ஆதம்லெப்பை றியான் எனும் குழந்தையுமே
மரணமடைந்தவர்களாவர்.
மேலும் ஆதம்லெப்பை றியா எனும் 5 வயது பெண் பிள்ளை
படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் அம்பாறை போதனா வைத்தியசாலையில் அதி
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருவதுடன் இது ஒரு நாசகார நடவடிக்கையாகவும் இருக்கலாம் என
சந்தேகிக்கப்படுகின்றது என பொலிசார் தெரிவிக்கின்றனர்.


Sri Lanka Rupee Exchange Rate