குற்றச்சாட்டுக்கள் இருந்தால் முறைப்பாடு செய்யவும்: ராஜித சேனாரட்ன
குற்றச்சாட்டுக்கள் இருந்தால் கையூட்டல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடியும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்து...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_126.html
குற்றச்சாட்டுக்கள் இருந்தால் கையூட்டல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடியும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.என்னைப் பற்றி குற்றச்சாட்டுக்கள் இருந்தால் கையூட்டல் தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ய முடியும்.
குற்றவாளிகள் பற்றிய தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
போதைப் பொருள் கடத்தல்காரர்கள், சட்டவிரோத மதுபான உற்பத்தியாளர்கள் போன்றவர்களின் பணம் பெற்றுக்கொண்டவர்கள் பற்றிய தகவல்கள் அம்பலமாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய நிறைவேற்றுப் பேரவையில் மோசடிகாரர்கள் இருப்பதாக பொதுபல சேனா குற்றம் சுமத்தியிருந்தது.
இது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate