90 மில்லியனை திருப்பிக் கொடுக்காமல் ஹிஸ்புல்லாஹ் மோசடி
நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் முறைப்பாடு! சிலின்கோ புரபிட் ஷெயாரிங் என்ற இஸ்லாமிக் வங்கியில் அப்பாவி முஸ்லீம்கள் சுமார் 600...

நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் முறைப்பாடு!
சிலின்கோ புரபிட் ஷெயாரிங் என்ற
இஸ்லாமிக் வங்கியில் அப்பாவி முஸ்லீம்கள் சுமார் 600
மில்லியன் ரூபாய் பணத்தை வைப்பிலிட்டு கடந்த பல
வருடங்களாக ஏமாற்றமடைந்துள்ளனா்.
இந்த வங்கியில் பணத்தை வைப்பிலிட்டு நஷ்டமடைந்தவா்களின் அமைப்பினர்
நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர்
கொடிக்காரவைச் சந்தித்து முறைப்பாட்டை முன்வைத்தள்ளனா்.
தாம் மேற்படி வங்கியில் வைப்பில் இட்ட பணத்தை இந்த புதிய அரசினால்
பெற்றுத் தருமாறு அவா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
நேற்று 29-01-2015 இவ்வைப்பிலிட்டவர்கள்
சங்கத்தின் அமைப்பின் தலைவர் முஜீப் இப்றாஹீம் மற்றும் மேல்மாகாண சபை
உறுப்பிணர் முஜீபுர் ரஹ்மானும்
ஏனைய அங்கத்தவா்களோடு சென்று இந்த முறைப்பாட்டை முன்வைத்தனா்.
இது தொடா்பாக இரகசியப்
பொலிசாருக்கு புதிதாக
ஒரு முறைப்பாட்டினை தெரிவித்து,
புதிய முறைப்பாட்டின் ஊடாக
இதனை பரீசீலனை செய்யும்
படி பொலிஸ்மா அதிபருக்கு
ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர்
கொடிக்கார பணிப்புரை விடுத்துள்ளார்.
இஸ்லாமிய வங்கி என்ற அடிப்படையில் பல
விளம்பரங்களொடு செலிங்கோ புரபிட் செஷாரிங் என்ற பெயரில் இந்த வங்கி
முஸ்லிம் பிரதேசங்களான
கொழும்பு, அக்குரனை, காத்தாண்குடி,
சம்மாந்துறை, கண்டி, பல பிரதேசங்களில்
15 கிளைகள் ஊடாக செயற்பட்டன.
இவ்வங்கியில் பணம் முதலிடும்
படி அகில இலங்கை ஜம்மியத்துல்
உலமாவின் பத்வாவின்
அனுசரணையோடு பத்திரிகை
வாயிலாகவும், நோன்பு காலத்தில்
பத்திரிகை இலங்கை வானொலி
முஸ்லிம் சேவை வாயிலாகவும்
விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன.
இதை நம்பி பல முஸ்லிம்கள் இந்த
வங்கியில் தமது பண
வைப்புகளை ஆரம்பித்தனா்.
இந்த வங்கியில் வைப்பிலிடப்பட்ட
அப்பாவி முஸ்லிம்களின்
பணத்திலிருந்து முன்னாள் அமைச்சர்
ஹிஸ்புல்லாஹ்வும்
அவரது மனைவியின் பெயரில் 90
மில்லியன் ரூபாவை வியாபாரத்துக்காக
கடனாக பெற்றுள்ளார்.
அவர் இன்றுவரை கடனாக பெற்ற அந்தப் பணத்தை செலுத்தவில்லை.
ஹிஸ்புல்லாஹ் அரசியல்
அதிகாரங்களைப் பயன்படுத்தி கடனை செலுத்தாமல்
இருந்து வந்ததாக அறிய
வந்திருக்கிறது.
இந்த வங்கியில் பல தரப்பினரும்
பணத்தை வைப்பிலிட்டுள்ளனா்.
ஆசிரியர் ஆசிரியைகள், மாணவா்கள்,
தொழிலாளா்கள், வியாபரிகள் என
பலரும் இந்த வங்கியில்
பணத்தை வைப்பிலிட்டிருந்தனா்.