பேருவளை நகர சபையில் குழப்பம்; மீண்டும் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி
பேருவளை நகர சபையில் தற்பொது குழப்பமான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக பேருவளை அங்கிருக்கும் எமது இணையத்தின் செய்தியாளர் தெரிவிக்கின்றார். இது தொ...


இது தொடர்பில் தெரியவருவதாவது
பேருவளை நகர சபையின் நகரபிதாவான மில்பர் கபூருக்கும் பிரதி நகரபிதாவான சஜித் தேவப்பிரியவுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இம்முரண்பாட்டினால் பேருவளை நகராதிபதி தலைமறைவாகியுள்ளதாக குறிபிடப்படுகின்றது.
இந்த நேரத்தில் நகர சபைக்கு வந்த பிரதி தலைவர் சபையைக் கூட்ட முணைந்தததால் ஏனைய முஸ்லிம் மற்றும் சிங்கள உறுப்பினர்கள் பிரதி தலைவருடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமுற்ற பிரதி மேயரின் தந்தை நகர சபைக்கு வருகை தந்து நகர சபையின் கண்ணாடியை அடாத்தாக உடைத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் பிரதிதலைவரின் தந்தையை தற்போது கைது செய்துள்ளனர்.
இதன் காரணமாக பிரதி மேயர் தனது சிங்கள குழுவினருடன் நகர சபைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருவளை தலைவர் முஸ்லிம் என்பதனால் இப்பிரச்சினை முஸ்லிம் சிங்கள குழப்பமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுவதாக பேருவளை செய்தியாளர் தெரிக்கின்றார்.
பேருவளை நகர சபையானது மகிந்த அரசாங்கத்தின் ஆளுகைக்குள் இந்து வருவது குறிப்பிடத்தக்கது