அமெரிக்க மோப்ப நாய்கள் இந்தியா வருகை
ஒபாமாவின் இந்திய வருகையை முன்னிட்டு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் இந்தியா வந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்தியாவி...

அமெரிக்க பாதுகாப்பு படையில் கிருமி எதிர்ப்பு மற்றும் நாசவேலைகளை கண்டறிவதற்காக மிக உயர்ந்த மோப்ப நாய் பிரிவு உள்ளது. பெல்ஜியன் மலினோயிஸ் வகையை சேர்ந்த இந்த நாய்கள் சந்தேகத்துக்குரிய நபர்களையும் வெடிபொருட்களையும் துல்லியமாக கண்டறியும் திறன் பெற்றவை ஆகும்.
கனத்த உருவமும் பெருத்த தலையும் கொண்ட இந்த நாய்கள் பல்வேறு நாட்டு ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் துணை ராணுவத்தில் இந்த நாய் பிரிவு உள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு துறையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள இந்த நாய்களுக்கு மிலிட்டரி ரேங்க் வழங்கப்பட்டு உள்ளது. கேனைன் அதிகாரிகள் என அழைக்கப்படும் இந்த பிரிவை சேர்ந்த 7 நாய்கள் கொண்ட முதல் பிரிவு இந்தியா வந்து சேர்ந்துள்ளது.