பொய் பிரசாரம்: விமல் வீரவன்சவின் மைத்துனர் கைது
நாட்டின் வடக்கில் பல சம்பவங்கள் இடம்பெறுவதாக பொய் பிரச்சாரங்களை முன்னெடுத்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மைத்துனர் என...

நாட்டின் வடக்கில் பல சம்பவங்கள் இடம்பெறுவதாக பொய் பிரச்சாரங்களை முன்னெடுத்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மைத்துனர் என கருதப்படும்ரணசிங்க ரந்துவ முதியன்சலாகே அஜித் குமார என்பவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நத்தரன் பொத்த, குண்டசாலையில் வசிக்கும் 55 வயதான குறித்த நபர் நேற்று (12.01.15) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் வகையில் பிரச்சாரங்களை முன்னெடுத்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.