கேணல் பதவிகளில் இருந்து அதிபர்களுக்கு விடுதலை.
தேசிய பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கேணல் பதவியை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்த...

முன்னர் இருந்த அரசாங்கத்தின் ஏற்பாட்டில், பாடசாலை அதிபர்களுக்கு, இராணுவ முகாம்களில் தலைமைத்துவ பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன், பயிற்சியை பெற்ற அதிபர்களுக்கு இராணுவப்பட்டமும் வழங்கப்பட்டது. இந்த தலைமைத்துவ பயிற்சியின் மூலம் 4,000 அதிபர்கள் இராணுவ பட்டங்களை பெற்றதுடன் 2013ஆம் ஆண்டில அதிபரொருவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.