ரோஹிங்யா முஸ்லிம்களும் நமது கடப்பாடும்
பேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளான இவர் தேசிய சூறா சபையின் பிரதித் தலைவர்களுள் ஒருவராகவும் இலங்கையின் முன்னணி இ...

http://kandyskynews.blogspot.com/2015/08/blog-post_2.html

பேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளான இவர் தேசிய சூறா சபையின் பிரதித் தலைவர்களுள் ஒருவராகவும் இலங்கையின் முன்னணி இஸ்லாமிய அறிஞராகவும் விளங்குகிறார்.
Ash Sheikh SHM Faleel
"இதில் எது உண்மை என்பதை முதலில் கண்டறிவது முஸ்லிம்களது கடமையாகும். எதிரி என்பதற்காக அவன் பற்றி பொய்யுரைப்பதற்கு எமது மார்க்கம் இடம் தரவில்லை என்பதை முதலில் புரிய வேண்டும்."

பர்மா ரோஹிங்யா முஸ்லிம்களது அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்ட பலர் படுமோசமாக கொலை செய்யப்படுவதாகவும் பள்ளிகளும் மற்றும் கட்டடங்களும் தீக்கிரையாக்கப்படுவதாகவும் அண்மைக்கால தகவல்கள் தெரிவிக்கின்றன.
சித்திரவதைகள் தாங்க முடியாததனால் ஆயிரக்கணக்கானவர்கள் படகுகளில் தப்பியோடுவதாகவும் அவர்களை ஏற்க இந்தோனேஷியா மலேசியா ஆகிய நாடுகள் கூட மறுப்பதாகவும் அந்தத் தகவல்களில் மேலும் கூறப்படுகிறது.
இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களாகிய எமது கடமையாது?
1. ரோஹிங்யா முஸ்லிம்கள் தொடர்பாக அண்மைய நாட்களில் வெளியிடப்படும் வீடியோக்களும் புகைப்படங்களும் மற்றும் அவர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறப்படும் தகவல்களும் இரண்டு மூன்று வருடங்களுக்கு முந்தியவை என்று சிலர் சமூக வலைத்தளங்களில் கூறி வருகிறார்கள். அதற்கான ஆதாரங்களை அவர்கள் புறத்திலிருந்து தருகிறார்கள்.
எனவே இதில் எது உண்மை என்பதை முதலில் கண்டறிவது முஸ்லிம்களது கடமையாகும். எதிரி என்பதற்காக அவன் பற்றி பொய்யுரைப்பதற்கு எமது மார்க்கம் இடம் தரவில்லை என்பதை முதலில் புரிய வேண்டும்.
அடுத்ததாக கிடைக்கும் தகவல்களை ஊர்ஜிதப்படுத்தாமல் வெளியிடுவது 'பாஸிக்' எனப்படும் பாவிகளது பண்பு என குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
2. அவை இப்போது நடக்கவில்லை என்று வைத்துக் கொண்டாலும் அதாவது இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் தான் நடந்தது என்றாலும் அந்த வீடியோக்களும் புகைப்படங்களும் பௌத்த தீவிரவாத பாஸிஸ்டுகளது மனதில் இருக்கும் வக்கிரத்தையும் கொடூரத்தையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.
அவை இஸ்லாமிய ரீதியில் மட்டுமன்றி பொதுவாக மனிதாபிமான ரீதியில் கடுமையாகக் கண்டிக்கத்தக்கன.
ஒரு முஸ்லிம் சகோதரன் அவன் அவனை (எதிரியிடம்) ஒப்படைத்து விடமாட்டான்; முஸ்லிம்கள் ஒரே உடம்பைப் போன்றவர்கள். அதில் ஓர் உறுப்புக்கு துன்பம் வந்தால் உடம்பில் ஏனைய உறுப்புக்கள் விழித்திருப்பதன் மூலமும் காய்ச்சலை வெளிப்படுத்துவதன் மூலமும் அத்துன்பத்தில் பங்கு கொள்ளும் ; முஸ்லிம்களது இரத்தம் சமமானது; உங்களில் ஒருவர் தனக்கு விரும்புவதையே பிற சகோதரனுக்கும் விரும்பாத வரை விசுவாசம் கொண்டவராகமாட்டார் போன்ற நபி மொழிகள் முஸ்லிம்களது சகோதரத்துவத்தை வலியுறுத்துகின்றன.
உலகின் எந்தவொரு மூலையில் ஒரு முஸ்லிம் பாதிக்கப்பட்டாலும் அது பற்றி கரிசனை எடுப்பதும் கவலைப்படுவதும் அந்தத் துன்பத்தை நீக்க முயற்சிப்பதும் "பர்ழு" ஆகும். இல்லாத போதும் அது ஈமானின் பலவீனத்தைக் காட்டும்.
பரிந்து பேசுவது, ஆட்சேபனை தெரிவிப்பது, பிறருக்கு இது பற்றி அறிவூட்டுவது, பொருளாதார ரீதியில் உதவுவது போன்றன மூலம் எமது இந்த ஈமானை பாதுகாத்து சகோதரத்துவத்தை வலுப்படுத்தலாம்.
ரோஹிங்யா முஸ்லிம்கள் மட்டுமன்றி உலகின் நாலா புறத்திலும் கசக்கிப் பிழியப்படும் எமது இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் இந்தக் கடமையை நாம் செய்தாக வேண்டும்.
3. இலங்கை வாழ் முஸ்லிம்கள் இதில் ஈடுபட முன் கவனிக்க வேண்டிய மிகவும் முக்கியமான ஓர் அம்சம் உள்ளது.
இலங்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக சிதறுண்டு வாழுகின்றார்கள்.
இந்நாட்டின் பெரும்பான்மையினர் அதாவது 70% ஆனவர்கள் பௌத்தர்கள். மியன்மாரிலும் பௌத்தர்கள் தான் பெரும்பான்மையினர்.
எனவே மியன்மாரில் இடம்பெறும் அடாவடித்தனங்களை கண்டிக்கும் போது நாம் வாழும் நாட்டிலுள்ள எமது நாட்டு பௌத்தர்களது மன நிலைகளையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.
இலங்கையில் பொதுபல சேனா போன்ற தீவிரவாத அமைப்புகளை வெறுக்கின்ற நாட்டில் சகல இனங்களும் சமாதானத்துடன் வாழ வேண்டும் என விரும்புகின்ற பல பௌத்த பிக்குகளும் அரசியல்,கல்வி,நிருவாகம்,ஊடகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். அதாவது எல்லாரும் மோசனமாவர்கள் அல்லர்.
எமக்கு இந்நாட்டிலுள்ள நல்லுள்ளம் படைத்த பௌத்தர்களது உறவும் ஒத்தாசையும் என்றென்றும் தேவை.
எனவே நாம் மியன்மார் பௌத்தர்களைப் பொதுவாக தாறுமாறாக எவ்வித நிதானமும் இன்றி பழிக்கவோ தூஷிக்கவோ ஆரம்பித்தால் அது இங்குள்ள பௌத்தர்களது அடிமனதை பாதிக்காமல் இருக்கும் எனக் கூற முடியாது.
எல்லோரிடத்திலும் மத இன உணர்வுகள் இருக்கவே செய்கின்றன. அவற்றை கவனமாக நாம் கையாள வேண்டும். உண்மையாகக் கூறினால் பௌத்தத்துக்கும் வன்முறைக்கும் சம்பந்தமில்லை என்று எமது அறிவு கூறுகிறது.
பௌத்தத்தின் பெயரை வைத்துக் கொண்டு காவியுடை தரித்து வெறியாட்டம் போடும் சிலர் அங்கு மட்டுமல்ல இங்கும் இருக்கிறார்கள்.
எனவே எமது செயற்பாடுகளை பௌத்தத்துக்கு எதிராகத் திருப்பாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மியன்மாரில் உள்ள முஸ்லிம்களுக்கு சமாதானத் தீர்வு தான் தற்போது முக்கியம். அதற்கு இலங்கையிலுள்ள நல்லுள்ளம் படைத்த பௌத்த மதத்தலைவர்கள் கல்விமான்களது ஒத்துழைப்பை பெறுவதற்கான முயற்சிகள் தேவை.
ரோஹிங்யா முஸ்லிம்கள் எல்லோரும் கடல் மார்க்கமாக தப்பியோடி வரும் போது முஸ்லிம் நாடுகளே ஏற்க மறுக்கும் போது எல்லோருமே அங்கிருந்து வெளியேறினால் அவர்களை யார்தான் பொறுப்பேற்பார்கள்?
எனவே எமது ஒவ்வொரு பேச்சும் செயலும் சமயோசிதமானதாக தூரநோக்குக் கொண்டதாகவே அமைய வேண்டும். நாம் வாழும் நாட்டில் பல கலவரங்களை நாம் பெரும்பான்மையினரிடமிருந்து சந்தித்த அனுபவங்கள் எமக்குண்டு.
ஆங்கிலத்தில் Reactive, proative என்று இரு வார்த்தைகள் உண்டு. நாம் வழக்கமாகவே சம்பவங்கள் நடந்து முடிந்த பின்னர் பரிகாரம் தேடுவதுண்டு. அதே சம்பவத்தின் சூடு தணிந்து விட்டால் முற்றாக மறப்பதுமுண்டு. ஆனால் அசம்பாவிதங்கள் நடக்காமலிருக்கவோ நிரந்தர தீர்வுகளைக் காண்பதற்கோ நாம் முயற்சிகளில் இறங்குவது குறைவு.
இறுதியாக தற்போது நடப்பதாகக் கூறப்படும் சம்பவங்கள் உண்மையாகவே தற்போதுதான் நடக்கின்றனவா என்பதை ஊர்ஜிதப்படுத்துவோம்.
அது நூறுவீத உண்மை என்றால் உடனடியான நிவாரணப் பணிகளுக்கும் பரிந்து பேசுவதற்கும் சட்டத்தின் முன் குற்றவாளிகளை நிறுத்தவும் எம்மால் ஆனதைச் செய்வோம்.
அதனை விட ஒரு படி மேலே சென்று இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாதிருக்க கூட்டான செயற்பாடுகளில் இறங்குவோம்.
தனிமனித முயற்சிகள், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின், இயக்கத்தின் முயற்சிகளை விட ஒருங்கிணைந்த கூட்டான முயற்சிகள் அதிக பலன் தரும்.
அல்லாஹ் ரோஹிங்யா முஸ்லிம்களும் ஏனைய சர்வதேச முஸ்லிம்களும் படும் துன்பங்களுக்கும் மனித இனம் பொதுவாக அனுபவிக்கும் துன்பங்களுக்கும் விடிவுகளைத் தருவானாக!