அரச குடும்பத்திற்கு மட்டும் இருந்த சுதந்திரம் இன்று நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ளது!– ராஜித சேனாரட்ன
அரச குடும்பத்திற்கு மட்டும் காணப்பட்ட சுதந்திரம் இன்று முழு நாட்டு மக்களுக்கும் கிடைத்துள்ளது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தொடங்கொட பிரதேச...


இன்று தேர்தல் ஆணையாளர் பலம் பொருந்தியவராக மாறியுள்ளார்.
19ம் திருத்தச் சட்டத்தின் மூலம் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இன்று நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது. இவ்வாறான ஓர் நிலைமை கடந்த காலங்களில் இருக்கவில்லை.
அரச குடும்பத்திற்கு மட்டுமே சுதந்திரத்தை அனுபவிக்க அவகாசம் இருந்தது.
அமைச்சரவை அமைச்சர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க, அமைச்சரவை அமைச்சர்களுக்கு இடையிலான சந்திப்புக்களை உளவு பார்க்க பல உளவுப் பிரிவுகள் காணப்பட்டன.
இவ்வாறான ஓர் நிலையில் அரசாங்கத்தை கொண்டு நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது.
வடக்கு காணிகளை அபகரித்து முகாம்கள் அமைக்கப்பட்டன.
காணி கொள்ளையிடப்பட்டது. மறு புறத்தில் பணம் கொள்ளையிடப்பட்டது.
தேர்தல்களுக்காக அரச பணம் கொள்ளையிடப்பட்டது.
ஜனவரி மாதம் 8ம் திகதி தோல்வியைத் தழுவுவோம் என புரிந்து கொண்ட மஹாராஜா, வழக்குகளிலிருந்து தப்பவே கட்சியையும் நாட்டையும் ஒப்படைத்துச் சென்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றோம் எனினும், எமது கொள்கைகளை விட்டுக்கொடுக்கவில்லை.
மஹிந்த அதிகாரத்தை பெருக்கிக் கொள்ளவே அரசியல் அமைப்பில் திருத்தங்களைச் செய்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பெருமளவில் ஆளும் கட்சியில் இணைந்து கொள்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.